close
Choose your channels

யோகிபாபுவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்!

Saturday, January 18, 2020 • தமிழ் Comments

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரும் தற்போதைய மாஸ் நடிகர்களின் படங்கள் அனைத்திலும் நடித்து வருபவருமான யோகிபாபு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வைபவ் நடித்துள்ள ’டாணா’ என்ற படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

’டாணா’  படத்திற்கு சென்சார் ’யூ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் ஜனவரி 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’சைக்கோ’ என்ற திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வைபவ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ள இந்த படத்தில் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz