நாய் இல்லாத வீடில்ல, நாய் இல்லாத நாடு இல்ல, நாய் இல்லாத உலகம் இல்லை: 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' டிரைலர்


Send us your feedback to audioarticles@vaarta.com


வைகைப்புயல் வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவான ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து இந்த படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனையடுத்து இந்த படத்தின் குழுவினர் கடந்த சில நாட்களாக புரமோஷன் பணியை விறுவிறுப்பாக செய்து வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் வடிவேலு நாய்களை திருடும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் அவர் தனது குழுவினருடன் திருடும் நாயை பிளாக்மெயில் செய்து பணம் பெற்று மீண்டும் திரும்ப கொடுப்பது போன்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் டிரைலரில் இருந்து தெரியவருகிறது.
முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட இந்த படத்தில் வடிவேலு மீண்டும் தனது முழு திறமையை நிரூபித்துள்ளார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரியவருகிறது.
லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த படம் நிச்சயம் வடிவேலுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments