close
Choose your channels
Viruman
Laal

இளையராஜா கச்சேரியில் வடிவேலு: வைரலாகும் செம வீடியோ

Friday, June 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசையுலகில் கின்னஸ் சாதனை செய்த இசைஞானி இளையராஜா தற்போதைய இளம் இசையமைப்பாளர்களுக்கு இணையாக பல திரைப் படங்களில் பணிபுரிந்து வருகிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது அவர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஜூன் 26-ஆம் தேதி மதுரையில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். ’இசையென்றால் இளையராஜா’ என்ற இந்த நிகழ்ச்சியில் வைகைப்புயல் வடிவேலு கலந்து கொண்டு அவர் பாடிய சில பாடல்களை பாட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடிவேலு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் பிறந்த மதுரை மீனாட்சி பட்டினத்திற்கு எங்கள் இசைஞானி கச்சேரி நடத்துவதற்காக வருகிறார். இதை கேட்டவுடன் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. கண்டிப்பாக நானும் அந்த கச்சேரிக்கு வருகிறேன் என்று கூறியுள்ளேன்.

தரையில் பாடிக் கொண்டிருந்த என்னை திரையில் பாட வைத்தது இளையராஜாதான். நான் திரையுலகில் புகுந்து விளையாடுவதற்கு இசைஞானி இளையராஜா தான் காரணம். பாட்டு பாடுவதற்கு எனக்கு பிள்ளையார்சுழி போட்டது அய்யா இளையராஜா தான்.

மதுரை நிகழ்ச்சியில் இளையராஜா முன் பாடி உங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்துவேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று அந்த வீடியோவில் வைகைப்புயல் வடிவேலு தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.