close
Choose your channels

நல்லவருக்கு ஓட்டுப்போடுங்கள்...! அதிமுக-விற்கு  வாக்கு சேகரித்த வாசன்....!

Thursday, April 1, 2021 • தமிழ் Comments


'பொல்லாதவர்களுக்கு வாக்கு போடாதீர்கள், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்' என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மூன்றாவது முறையாக களமிறங்குகிறார். இவரை ஆதரிக்கும் வகையில் , தமாகா தலைவர் ஜி,கே.வாசன் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்த அவர் கூறியிருப்பதாவது, "நல்ல திட்டங்களை கொடுப்பவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும், உங்கள் தொகுதி அமைச்சர் நல்ல குணம் படைத்தவர், இவருக்கு வாக்களித்தால் நீங்கள் வளர்வீர்கள், உயர்வீர்கள், இதில் மாற்று கருத்து இல்லை என்று கூறி வாக்குகள் சேகரித்தார். இவருடன் அதிமுக கட்சித்தலைவர்கள் ,தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz