கணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு!
வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் வகையில் அவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஐதராபாத் அருகே நடந்துள்ளது
ஐதராபாத் அருகே உள்ள ஜகத்கிரி என்ற பகுதியை சேர்ந்த அதித்வைதா என்ற 37 வயது நபர் அருகில் உள்ள கல்குவாரியில் பணிபுரிகின்றார். இவர் நேற்று மாலை வேலை முடிந்து களைப்புடன் வீடு வந்த நிலையில் மனைவி ஜோதியிடம் டீ போட்டு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் அவரது மனைவி அப்போது வேறு வேலையில் இருந்ததால் டீ போட்டு கொடுக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அதித்வைதா திடீரென தான் பணிபுரியும் கல்குவாரிக்கு சென்று மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து கதறி அழுத காட்சி அந்த பகுதியினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒரே ஒரு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவி தன் வாழ்நாளில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது பெரும் சோகமாக கருதப்படுகிறது