close
Choose your channels
siren
lal_salaam

அமேசானில் சென்சார் கட் இல்லாத 'மாஸ்டர்? 

Thursday, January 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்த படம் இரண்டே வாரங்களில் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் நாளை இந்த திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அமேசானில் வெளியாகும் ’மாஸ்டர்’ திரைப்படம் சென்சார் கட் இல்லாத படமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் சென்சாரில் கட் செய்யப்பட்ட நிலையில் அந்த காட்சிகள் உடன் கூடிய ’மாஸ்டர்’ திரைப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் அமேசானில் பார்க்க முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே ’மாஸ்டர்’ திரைப்படம் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் என்ற நிலையில் சென்சார் கட் இல்லாத படமென்றால் மேலும் சில நிமிடங்கள் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.