close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி: திமுக அதிகாரபூர்வ அறிவிப்பு

Thursday, July 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகர்-தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், திமுகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். இதனையடுத்து அவருக்கு திமுகவில் பதவி வழங்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தனக்கு திமுக தொண்டன் என்ற பதவி மட்டும் போதும், வேறு எந்த பதவியும் தேவையில்லை என்று உதயநிதி கூறி வந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுகவின் முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குனராக உதயநிதி இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.