ஏர்போர்ட் வேண்டாம் என சொல்லவில்லை.. விவசாய நிலத்தில் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்: விஜய்


Send us your feedback to audioarticles@vaarta.com


பரந்தூரில் அமைய இருக்கும் புதிய விமான நிலையம் வேண்டாம் என மூன்று வருடங்களாக போராடி வரும் போராட்டக்காரர்களை இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்தபோது, ’விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, விவசாய நிலத்தில் வேண்டாம் என்று தான் கூறுகிறேன்’ என்று தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
நான் ஊருக்குள் வருவதற்கும், நமது கட்சியினர் நோட்டீஸ் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்படுவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. உங்களின் வசதிக்காக மக்களோடு இருப்பதை போன்று நம்பும் வகையில் நீங்கள் நடக்கும் நாடகத்தை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நாடகம் ஆடுவதில் திமுகவினர் கில்லாடிகள், மத்திய மாநில அரசுகள் நடத்தும் இந்த நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்’ என்று கூறினார்.
மேலும் ’விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையத்தை கொண்டு வரலாம் என்றும் விமான நிலையத்திற்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய விஜய், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை, ஏர்போர்ட் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, ஆனால் அதே நேரத்தில் இங்கே வேண்டாம் என்று தான் சொல்கிறேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் டங்க்ஸ்டன் சுரங்க வேண்டாம் என முடிவெடுத்த தமிழக அரசு, பரந்தூர் விமான நிலையம் மட்டும் வேண்டாம் என்று ஏன் சொல்லவில்லை. இந்த திட்டத்தால் ஆட்சியாளர்கள் ஏதோ லாபம் பெற இருப்பதாகவும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com