அண்டர்வாட்டரில் லிப்லாக்: கர்ப்ப நேரத்தில் சீரியல் நடிகையின் ரொமான்ஸ் போட்டோஷூட்!


Send us your feedback to audioarticles@vaarta.com


சீரியல் நடிகை ஒருவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது கணவருடன் நீருக்கு அடியில் லிப்-லாக் முத்தம் கொடுக்கும் ரொமான்ஸ் போட்டோஷூட் புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி என்பதும் இந்த தொடரில் ஜெனிபர் என்ற நடிகை முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கேரக்டர் செல்லும் போக்கு பிடிக்கவில்லை என கூறி சமீபத்தில் இவர் அந்த தொடரில் இருந்து விலகினார் என்பதும், தற்போது அவர் கலர்ஸ் டிவியில் உள்ள ஒரு தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெனிபருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பம் ஆகியுள்ளார். கர்ப்ப நேரத்தில் விதவிதமான போட்டோக்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்த ஜெனிபர் தற்போது கணவருடன் நீருக்கு அடியில் இருக்கும் அண்டர் வாட்டர் போட்டோ ஷூட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் லிப்லாக் உள்பட பல ரொமான்ஸ் காட்சிகள் உள்ளன என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலக மற்றும் சின்னத்திரை உலகில் நடிகைகள் மத்தியில் தற்போது அண்டர் வாட்டர் போட்டோஷூட் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.