close
Choose your channels

கமல்ஹாசனுடன் த்ரிஷா.. 'தக்லைஃப்' படப்பிடிப்பின்போது ஒரு ஜாலி போட்டோ.. உடன் இருப்பவர் யார்?

Friday, May 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சமீபத்தில் டெல்லியில் இந்த படத்தை முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் சிம்பு, த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தற்போது இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசனும் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பின் இடையே எடுத்த இந்த ஜாலி புகைப்படத்தில் பேஷன் டிசைனர் அமிர்தா ராம் அவர்களும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கமல்ஹாசன், சிம்பு மற்றும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment