close
Choose your channels
IKK

த்ரிஷாவின் அடுத்த படம் குறித்த ஆச்சரியமான தகவல்!

Friday, October 15, 2021 • தமிழ் Comments

தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போதும் கூட இளம் நடிகைகளுக்கு இணையாக சுமார் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ’குந்தவை’ என்ற வேடத்தில் த்ரிஷா நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் த்ரிஷா நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. த்ரிஷா முதல்முறையாக ஒரு தெலுங்கு வெப்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ‘பிருந்தா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தொடரின் டைட்டில் வேடத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொடரில் த்ரிஷா இந்தத் தொடர் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz