close
Choose your channels

ஒரு வருடம் தள்ளிப்போகும் 'மிஷன் இம்பாஸிபிள்' அடுத்தடுத்த பாகங்கள்: ரசிகர்கள் அதிருப்தி!

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த ’மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் ஏழாம் பாகம் மற்றும் எட்டாம் பாகம் படங்களின் ரிலீஸ் தேதி ஒரு வருடம் தள்ளிப்போனதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இதுவரை 6 பாகங்கள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் ஏழாம் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தள்ளிப்போனதால் அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

அதேபோல் ’மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் எட்டாம் பாகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மிஷன் இம்பாஸிபிள்’ பாகம் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரு வருடம் தள்ளிப்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.