close
Choose your channels

விஜய் ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து: 'வாரிசு' படக்குழு அறிவிப்பு!

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த போஸ்டர் நேற்று இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

The Boss Returns என்ற ஹேஷ்டேக்குடன் வெளியான இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்களும் ரசித்து தங்களது கருத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இன்னும் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில் இன்று செகண்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக் வெளியிடப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 11.44 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் வெளியாகும் என்றும் இன்று மாலை 5.02 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் மூன்றாவது லுக் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தளபதி விஜய்யின் ‘வாரிசு’ ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.