close
Choose your channels

ஷாருக்கானின் 54வது பிறந்த நாள்: நள்ளிரவில் வீட்டில் குவிந்த ரசிகர்கள்!

Saturday, November 2, 2019 • தமிழ் Comments

ஷாருக்கானின் 54வது பிறந்த நாள்: நள்ளிரவில் வீட்டில் குவிந்த ரசிகர்கள்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர்களின் 54 வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஷாருக்கானின் ஒவ்வொரு பிறந்தநாளின் போது அவரது மும்பை வீட்டின் முன் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருவது வழக்கம்

அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டின் முன் பலர் குவிந்தனர். மும்பை நகரத்தில் இருந்து மட்டுமின்றி டெல்லி, நாக்பூர் போன்ற பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வந்ததாகவும், ஷாருக்கானை நேரில் பார்த்து அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்

இதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் தனது வீட்டில் உள்ள பால்கனியில் தோன்றிய ஷாருக்கான் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் தூங்கிக் கொண்டு இருப்பதால் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் தயவுசெய்து அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டதை அடுத்து, ரசிகர்கள் ஷாருக்கானை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் கலைந்து சென்றனர்

Get Breaking News Alerts From IndiaGlitz