close
Choose your channels
Viruman
Laal

காளாண் பிரியாணி சாப்பிட்டு கவனம் ஈர்த்த ராகுல்… குவிந்து வரும் லைக்குகள்!

Saturday, January 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.பியுமான ராகுல் காந்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார். தற்போது 3 நாள் சுற்றுப் பயணமாக ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கரூர் பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பிரபல யூ டியூப் சேனலான கிராமத்து சமையல் கலைஞர்களுடன் ராகுல் காந்தி சமையல் செய்து அவர்களோடு சேர்ந்து காளாண் பிரியாணியை சுவைத்து இருக்கிறார். இந்த வீடியோ தமிழக மக்கள் மத்தியில் கடும் வைரலாகி இருக்கிறது. மேலும் கிராமத்து சமையல் நிகழ்ச்சி கலைஞர்களோடு ராகுல் ஓலைப் பாயில் அமர்ந்து காளாண் பிரியாணியை சுவைத்துவிட்டு “நல்லா இருக்கு” என்று தமிழில் பேசுகிறார்.

இதனால் ராகுல் பேசிய “நல்லா இருக்கு” என்ற தமிழ் வார்த்தையும் தற்போது தமிழக மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று எடுக்கப்பட்ட இந்த சமையல் வீடியோவிற்கு இதுவரை 3.2 லட்சம் ரசிகர்கள் லைக்குகளை தெரிவித்து இருக்கின்றனர். அதோடு ராகுல் காந்தியின் எளிமையையும் அவரது பெருந்தன்மையையும் தமிழக மக்கள் பாராட்டி வருகின்றனர். ராகுல் மேற்கொண்டு உள்ள இந்த 3 நாள் சுற்றுப் பயணம் முழுக்கவே அவர் மாட்டு வண்டி பயணம், பேக்கரியில் டீ, ரோட்டுக்கடை சாப்பாடு என தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.