close
Choose your channels

கமலுக்கு பதிலடியும் அஜித்துக்கு பாராட்டும் தெரிவித்த தமிழக அமைச்சர்

Wednesday, April 8, 2020 • தமிழ் Comments

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கொரோனா நிவாரண நிதி கொடுத்த அஜித்துக்கு பாராட்டும் மத்திய மாநில அரசை விமர்சனம் செய்து கடிதம் எழுதிய கமல்ஹாசனுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் திடீரென பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு குறித்து விமர்சனம் செய்தார். அவருடைய இந்த கடிதத்தில் மாநில அரசையும் குறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலடி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’விமர்சனம் செய்யும் நேரம் இது கிடையாது என்றும் கமல்ஹாசனிடம் நல்ல ஆலோசனை இருந்தால் தாராளமாக அரசுக்கு வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித்குமாருக்கு நன்றி என்று கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, அஜித்தை போலவே அனைத்து நடிகர்களும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Get Breaking News Alerts From IndiaGlitz