close
Choose your channels
RaRa

அதிரடியாக ஒர்க் அவுட் செய்யும் முதல்வர்....! இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!!!

Tuesday, June 29, 2021 • தமிழ் Comments

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழகத்தின் முதல்வராக முக.ஸ்டாலின் கடந்த மே-மாதம் பதவியேற்க, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது.

அரசியல் பரபப்புகளுக்கு மத்தியிலும், உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட முதல்வர் வாரத்தின் சில நாட்களில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்டாலின் ஜிம்-ல் வொர்க்அவுட் செய்யும் காணொளி வைரலானது. தேர்தல் பிரச்சாரங்களுக்கு இடையிலும், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் சிவப்பு நிற டீசர்ட் அணிந்து, ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 68 வயதிலும் உடற்பயிற்சி செய்வதால் தான் தலைவர் இளமையாக இருக்கிறார் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மக்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி மேற்கொள்வது தேவையானது என பல மருத்துவர்களும் பரிந்துரை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Get Breaking News Alerts From IndiaGlitz