நேற்று ஓபிஎஸ்...இன்று ஈபிஎஸ்...! போட்டி போடும் போஸ்டர்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக, நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப்பின் அதிமுக-வில் உள்கட்சி சண்டைகள் நடந்து கொண்டே தான் வருகிறது. கடந்த ஒருவாரமாக சசிகலா கட்சியில் இணைய இருப்பதாக, ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ்-ம், ஈபிஎஸ்-ம் ஒருங்கிணைந்து, அறிக்கைகள் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிடுகின்றனர். அந்தவகையில் பன்னீர் செல்வத்தை ஆதரித்து, எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கும் வகையிலும், ஓபிஎஸ் ஆதரவாளார்கள் திருநெல்வேலியில் போஸ்டர் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த போஸ்டரில் இனி கட்சியில் பன்னீர் செல்வத்தை கலந்து ஆலோசனை செய்யாமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அப்படி எடுத்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் கட்சி தோல்வியை தழுவியது என்றும் கூறியுள்ளனர்.
அப்படி ஆலோசனை செய்யாமல் முடிவு எடுக்கப்பட்டால், தலைமை கழகத்தை முற்றுகை இடுவோம் எனவும் கூறியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் நெல்லை நகரம் முழுவதும், அதிமுக முன்னாள் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் " எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் புகைப்படங்கள் இடப்பெற்றிருந்தாலும் சர்ச்சையாகவே கிளம்பியுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று போஸ்டர் ஒட்ட, அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்ட அதிமுக-வில் சலசலப்பு முடிவடையாத நிலையில் உள்ளது. இதனால் கட்சித்தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலரும் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments