சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துடன் 'தக்லைஃப்' வீடியோ.. முக்கிய அப்டேட் தந்த கமல்ஹாசன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், சற்றுமுன் சிஎஸ்கே அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துக் கொண்டு, கமல்ஹாசன் ‘தக்லைஃப்’ படத்தின் முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். மேலும், அவர் பகிர்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகிய ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புரமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சற்றுமுன் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ பதிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹேஷ்டேக்குகளை குறிப்பிட்டு, சிஎஸ்கே அணி வெற்றி பெற வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
The Roar of Lions the Rule of Thugs!@IPL @ChennaiIPL #CSK #MIvsCSK#ThugstersFirstSingle Coming soon
— Raaj Kamal Films International (@RKFI) March 23, 2025
#ThugLife#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film@ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran @bagapath @trishtrashers… pic.twitter.com/ZD74XbD7QR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com