close
Choose your channels
Rocketry
Yaanai

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்: யார் யார் தெரியுமா?

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை ஹீரோ மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி தற்போது ’தமிழரசன்’ ’அக்னிசிறகுகள்’ ’பிச்சைக்காரன் 2’ ’கொலை’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டே ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் ’ரத்தம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’ரத்தம்’ படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க போவதாக இயக்குனர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்/ ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மஹிமா நம்பியார் ஆகிய மூன்று ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்தாலும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஒருவர் மட்டுமே நடிக்க போகிறார் என்றும் அவர் யார் என்பது படத்தைப் பார்த்தால் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் கொல்கத்தா செல்ல உள்ளதாகவும் அங்கு 30 சதவீத படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்தே வெளிநாட்டு படப்பிடிப்பு நடக்கும் என்றும் இயக்குனர் அமுதன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.