close
Choose your channels
Viruman
Laal

இந்த ஆண்டில் மூன்று விக்ரம் படங்கள்: சீயான் ரசிகர்கள் குஷி!

Saturday, March 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் நடித்த ’மஹான்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் இன்னும் மூன்று விக்ரம் படங்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் நடித்து முடித்துள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படமான ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நீண்ட காலமாக தாமதமான நிலையில் தற்போது இந்த படத்தையும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் பேட்ச்வொர்க் பணிகளை ஒருபக்கம் கவுதம் மேனன் கவனித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் விக்ரம் இந்த படத்தின் டப்பிங் பணியை தொடங்கி விட்டதாக தெரிகிறது. அனேகமாக இந்த படமும் இன்னும் ஓரிரு வாரங்களில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்றும் விரைவில் படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

எனவே துருவநட்சத்திரம், கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய மூன்று விக்ரம் திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருப்பதால் சியான் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.