close
Choose your channels

இந்த வாரம் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. ஓடிடி ரிலீஸ் முழு விவரங்கள்..!

Thursday, May 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரையரங்குகளில் இரண்டு அல்லது மூன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் ரிலீசான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படமும் சில தெலுங்கு மொழி திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அது குறித்து தற்போது பார்ப்போம்.

இந்த வாரம் ஆஹா ஓடிடியில் ’ஒரு நொடி’ என்ற தமிழ் திரைப்படம் வெளியாகவுள்ளது. தமன் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் மணிவர்மன் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹாட்ஸ்டாரில் இந்த வாரம் ’உப்பு புளி காரம்’ என்ற தொடர் வெளியாக உள்ளது என்பதும் இந்த தொடர் நல்ல வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வாரம் ஆஹா ஓடிடியில் ‘ஸ்ரீரங்கத்து நீத்துலு’ என்ற தெலுங்கு படம் வெளியாகவுள்ளது. அதேபோல் ஈடிவி வின் ஓடிடியில் ‘ராமண்ணா யூத்’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment