close
Choose your channels
enpt
nd2

இந்த வாரம் வெளியாகும் 4 படங்களின் ரன்னிங் டைம் தகவல்கள்

Thursday, December 5, 2019 • தமிழ் Comments

வரும் வெள்ளியன்று 5 படங்கள் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென வினியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்று எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் ’கேப்மாரி’ திரைப்படம் அடுத்த வெள்ளியன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து இந்த வாரம் பா.ரஞ்சித் தயாரித்த ‘இரண்டாம் உலகக்ப்போரின் கடைசி குண்டு, சுந்தர் சி நடித்த ’இருட்டு’,  கதிர் நடித்த ‘ஜடா’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’தனுசு ராசி நேயர்களே’ ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த நான்கு திரைப்படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அவை பின்வருமாறு

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் ரன்னிங் டைம்: 2 மணி 14 நிமிடங்கள் (134 நிமிடங்கள்)

இருட்டு படத்தின் ரன்னிங் டைம்: 2 மணி நேரம் 11 நிமிடங்கள்  (131 நிமிடங்கள்)

ஜடா படத்தின் ரன்னிங் டைம்: 2 மணி நேரம் 10 நிமிடங்கள்   (130 நிமிடங்கள்)

தனுசு ராசி நேயர்களே படத்தின் ரன்னிங் டைம்: 2 மணி நேரம்   (120 நிமிடங்கள்)

மேற்கண்ட நான்கு படங்களுமே சுமார் 2 மணி நேரம் ரன்னிங் டைம் கொண்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz