close
Choose your channels
Por
Joshwa

பிக்பாஸ் வீட்டில் இந்த வார எவிக்சன் யார்? எதிர்பார்த்த அதே போட்டியாளர் தான்..!

Saturday, December 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த ஆர்வம் பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் ஜோவிகா எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜோவிகா ஆரம்பத்தில் தனித்தன்மையுடன் விளையாடினாலும் ,மாயா மற்றும் பூர்ணிமா கேங்கில் இணைந்த பிறகு அவரது தனித்தன்மை காணாமல் போனது.

குறிப்பாக பிரதீப்புக்கு எதிராக அவர் ரெட் கார்டு காட்டிய பிறகு பார்வையாளர்கள் மத்தியில் அவருக்கு நற்பெயர் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து இருந்த நிலையில் இந்த வாரம் அவர் நாமினேஷனில் சிக்கிய நிலையில் முதல் வாரமே அவர் வெளியேற்றப்படுகிறார்.

மேலும் பெரும்பாலும் கடந்த சில வாரங்களாக ஜோவிகா பெரிய அளவில் விளையாடவில்லை என்றும் பல நேரங்களில் தூங்கிக் கொண்டுதான் இருந்தார் என்பதும் அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது பல நேரங்களில் நாய் குரைத்ததையும் பார்த்தோம். இந்த சீசனின் மிகச்சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டிய ஜோவிகா, ஒருசில தவறுகள் செய்ததால் வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.