close
Choose your channels
Por
Joshwa

'தளபதி 67' படத்தில் இந்த ஹீரோவும் இல்லை.. உறுதி செய்த படக்குழுவினர்!

Wednesday, February 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்களும் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டது.

ஏற்கனவே கமல்ஹாசன் உள்பட ஒருசிலர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவை அனைத்தும் வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நேற்றைய மற்றும் இன்றைய அறிவிப்பின் மூலம் நிவின்பாலியும் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜின் ’லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்’ அடிப்படையில் இல்லை என்றும் முழுக்க முழுக்க இந்த படம் விஜய் மற்றும் லோகேஷ் படமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மற்றும் கார்த்தியின் டெல்லி கேரக்டர் கூட இந்த படத்தில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos