close
Choose your channels
NMM

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த சூப்பர்ஹிட் தம்பதிகளா?

Tuesday, August 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ’ஏகே 61’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் அடுத்து நடிக்க இருக்கும் ’ஏகே 62’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’ஏகே 63’ திரைப்படத்தை சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய தம்பதிகள் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்த ’விக்ரம் வேதா’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய தம்பதிகள் புஷ்கர் மற்றும் காயத்ரி. இந்த தம்பதிகள் தற்போது ’விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகின்றனர் என்பதும் ரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் நடித்து வரும் இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த புஷ்கர் காயத்ரி தம்பதிகள் அஜித்தின் அடுத்த படத்திற்காக திரைக்கதை எழுதும் பணியில் இருப்பதாகவும் விரைவில் அஜித் படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ’ஏகே 63' படத்தை புஷ்கர் காயத்ரி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.