close
Choose your channels

ராணா திருமணத்தில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் யார் யார்?

Friday, August 7, 2020 • தமிழ் Comments

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் ராணா டகுபதி என்பது தெரிந்ததே அவருக்கும் மிஹீகா பஜாஜ் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் இவர்களுக்கு நாளை ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தத் திருமணத்திற்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளதால் மிகச் சிலர் மட்டுமே கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருதரப்பு குடும்ப உறுப்பினர்கள் தவிர, திரையுலகை சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக நாக சைதன்யா மற்றும் சமந்தா நட்சத்திர ஜோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ராணாவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராம்சரண் தேஜாவுக்கும், நடிகர் சர்வானந்த்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் நாளை நடைபெற உள்ள ராணா-மிஹீகா பஜாஜ் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz