close
Choose your channels
Don
Nenjukku Needhi

சூர்யாவின் அடுத்த படத்தில் 'தெருக்குரல் அறிவு' பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sunday, October 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஞானவேல் என்பவர் இயக்கிய ’ஜெய்பீம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடியில் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக சூர்யாவின் நடிப்பு இந்த படத்தில் அட்டகாசமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பவர் சாங் ஒன்று நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீன் ரோல்டன் இசையில் உருவாகிய இந்த பாடலை எழுதி பாடியுள்ளார் தெருக்குரல் அறிவு’. ஏற்கனவே தெருக்குரல் அறிவு’ பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலும் அந்த வரிசையில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.