close
Choose your channels
NMM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாக் ஆஃப் தி போட்டியாளர் இவர்தான்: யாருமே எதிர்பார்க்காத சஸ்பென்ஸ்!

Tuesday, October 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் ஞாயிறன்று தொடங்கப்பட இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் போட்டியாளர்கள் மிகவும் பரபரப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது போட்டியாளர்களின் பட்டியலை பார்த்தால் தெரிகிறது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் விஜே மகேஸ்வரி என்று கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்த இவர் சன் டிவியில் விஜேயாக இருந்தவர் என்பதும் ஒரு சில தொடர்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைய இருப்பதால் கிளாமருக்கு பஞ்சம் இருக்காது என்றும் அதுமட்டுமின்றி இந்த சீசனின் டாக் ஆஃப் தி போட்டியாளர் இவர்தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் அறுதியிட்டு உறுதியிட்டு கூறியுள்ளனர். ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்க்காத வகையில் மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டில் வலம் வருவார் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கிளாமர், காமெடி மற்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.