close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல நடிகரின் சகோதரி: முதல்வர் வேட்பாளரா?

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரின் சகோதரி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளதாகவும் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகரும் கொரோனா வைரஸ் முதல் அலையின் போது ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து ஹீரோவாக போற்றப்பட்டவருமான நடிகர் சோனுசூட் அவர்களின் சகோதரி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் சோனுசூட் சகோதரி மாளவிகா இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் காங்கிரஸில் தற்போது முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வரும் நிலையில் மாளவிகா முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனது சகோதரி காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளதை அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் சோனுசூட் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் காலத்தில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தவர் சோனுசூட் என்பதும் ஏராளமான தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உதவிசெய்து மக்களால் ஹீரோவாக போற்றப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு பயன்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.