close
Choose your channels
siren
lal_salaam

எங்கேயோ பிறந்து  எங்கேயோ வளர்ந்து இங்க வந்து உசுர விட்றாங்க.. த்ரிஷாவின் 'தி ரோடு' டிரைலர்..!

Thursday, September 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ‘தி ரோடு’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மதுரை அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தில் மர்மமான முறையில் பல விபத்துக்கள் ஏற்பட்டு வரிசையாக உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து துப்பறிய செல்லும் காவல்துறை அதிகாரி த்ரிஷாவுக்கு ஏற்படும் பிரச்சனை, அந்த பிரச்சனைகளை அவர் எப்படி எதிர்கொண்டார், அந்த விபத்துகளின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த கதை என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

நடிகை த்ரிஷா ஒருவரே இந்த படத்தை தூக்கி நிறுத்தி உள்ளார் என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது. த்ரிஷா ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள இந்த படத்தில் டான்ஸிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லட்சுமி பிரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.

அருண் வசீகரன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் வெங்கடேஷ் ஒளிப்பதிவில் சிவராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் நிச்சயம் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.