ஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா???
இங்கிலாந்து சட்டப்படி, அந்நாட்டின் குடிமக்கள் ஒரு வாரத்துக்கு 14 யூனிட் அளவு வரை மட்டுமே மது அருந்த வேண்டும். இந்தச் சட்டத்தை இங்கிலாந்து ராணியார் முறைப்படி கடைபிடிக்கிறாரா என ஊடகங்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. காரணம் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
அத்தகவல் கடந்த ஆண்டு இண்டிபெண்டன்ட் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் தினமும் மதிய உணவு வேளைக்கு முன்னர் ஜின் மற்றும் டுபோனெட் ஒயின் மதுவகைகளை ஒன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சை மற்றும் ஐஸ் கட்டிகளை கலந்து குடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் மதிய உணவு உண்ணும்போதே ஒயின் மதுவையும் குடிப்பார் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதோடு மாலை வேளையில் ஜின் மற்றும் வெர்மவுத் கலந்த கார்ட்டினி (காக்டெய்ல்) மதுவை மகாராணி அருந்துவார் என்றும் இந்த அளவுகளை எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்கு மகாராணியார் 6 யூனிட் அளவு மதுவை அருந்துவார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அளவுகளை வாரத்துக்கு மாற்றிப் பார்த்தால் ஒரு வாரத்துக்கு 40.6 யூனிட் என்றாகிறது. சாதாரண குடிமக்கள் வாரத்துக்கு 14 யூனிட் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு இருக்கும் ஒருநாட்டின் அரசியார் இப்படி குடிக்கலாமா எனப் பலரும் தற்போது இணையத்தில்
சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர்.