close
Choose your channels
Viruman
Laal

சூரியின் சொத்துமதிப்பு இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட் திரையுலகம்!

Thursday, July 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூரியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ள நிலையில் அவருக்கு இத்தனை கோடி சொத்தா? என திரையுலகினர் ஆச்சரியத்தில் உள்ளனர்.

’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் பரோட்டா சூரி என்ற கேரக்டரில் அறிமுகமாகி அதன் பின்னர் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். தற்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ’விடுதலை’ என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த பல ஆண்டுகளாக அவர் திரையுலகில் சம்பாதித்த பணத்தை மற்ற நடிகர்கள்போல் சொந்தப் படம் எடுத்து கையை சுட்டுக் கொள்ளாமல் அவருடைய சொந்த ஊரான மதுரையில் ஹோட்டல்களை ஆரம்பித்தார். அம்மன் உணவகம் என்று மதுரையில் முதலில் உணவகத்தை ஆரம்பித்து அதன் பிறகு மதுரையை சுற்றியுள்ள பல இடங்களில் கிளைகளையும் அமைத்தார்.

சூரியின் குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருப்பதால் அவருடைய ஹோட்டல்களை அவருடைய உறவினர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். மேலும் அவர் ஆரம்பித்த ஹோட்டல் அனைத்துமே லாபகரமாக சென்று கொண்டிருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் திரை உலகில் மற்றும் ஹோட்டல்களில் சம்பாதித்த வகையில் நடிகர் சூரிக்கு 40 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.