close
Choose your channels
Por
Joshwa

700 படங்களுக்கும் மேல் நடித்த நகைச்சுவை நடிகர் காலமானார். திரையுலகினர் இரங்கல்..!

Monday, March 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்பட 700 படங்களில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்ட். தமிழில் ’லேசா லேசா’ உள்பட ஒரு சில படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் இன்னசென்ட் நுரையீரல் பாதிப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கடந்த 1972 ஆம் ஆண்டு மலையாளத்திரையுலகில் அறிமுகமான நடிகர் இன்னாசென்ட் 50 ஆண்டுக்கு மேலாக மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் த்ரிஷா நடித்த ’லேசா லேசா’ உள்ளிட்ட படங்களிலும் ஹிந்தி கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி கொச்சி தனியார் மருத்துவமனையில் இன்னசென்ட் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும் அதுமட்டுமின்றி திடீரென நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் இன்னசென்ட் மறைவுக்கு மம்முட்டி, திலீப் உள்ளிட்ட நடிகர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் நடிகர் இன்னசென்ட் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.