close
Choose your channels

கமல்ஹாசனின் 'குருதிப்புனல்' படத்தில் நடித்தவர் இந்த பிரபலமா?

Wednesday, July 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் இணைந்து நடித்த ‘குருதிப்புனல்’ திரைப்படத்தில் தற்போதைய பிரபலம் ஒருவர் நடித்து உள்ளார் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘குருதிப்புனல்’ கமல்ஹாசன், அர்ஜுன், கெளதமி நடிப்பில் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் மகேஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா நடித்துள்ளார். பிசி ஸ்ரீராம் உதவியாளராக இருந்து அதன் பின்னர் பிரபல ஒளிப்பதிவாளராக மாறிய அரவிந்த் கிருஷ்ணா இந்த படத்தில் நடித்திருக்கும் தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘குருதிப்புனல்’ படத்தில் மட்டுமின்றி அஜித்தின் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ விஜய் இயக்கிய ’பொய் சொல்ல போறோம்’ விஷால் நடித்த ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவை பொருத்தவரை தனுஷ் அறிமுகமான ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தில் தான் இவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன்பின்னர்’காதல் கொண்டேன்’ ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுப்பேட்டை’ ’குசேலன்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களுக்கும் ஒரு சில மலையாள, தெலுங்கு திரைப்படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.