close
Choose your channels
siren
lal_salaam

மெக்சிகோவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: கிளாமர் பிகினியில் அக்கா-தங்கை நடிகைகள்!

Sunday, July 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமீபத்தில் மெக்சிகோவில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் தனது சகோதரி உள்பட குடும்பத்தாருடன் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

விஜய்யின் ’தமிழன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலம் வருகிறார் என்பதும் அவரது படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தனது 40வது பிறந்தநாளை தனது கணவர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மெக்சிகோவில் கொண்டாடியுள்ளார். தொடர்ச்சியாக 48 மணி நேரம் அவர் மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடியதாகவும் பிறந்த நாள் கொண்டாட்டம் படு அமர்க்களமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பிரியங்கா சோப்ராவின் தங்கையும் நடிகையுமான பிரணதி சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். பிகினி உடையில் அக்கா தங்கை இருவரும் நீச்சல் குளத்தில் இருக்கும் காட்சிகள் உள்பட பல புகைப்படங்கள் இந்த பதிவில் உள்ளது என்பதும், இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.