close
Choose your channels

திமிறும் யானையோடு போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் நடிகை… வைரல் வீடியோ!

Monday, June 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை சாக்ஷி அகர்வால் திமிறிக்கொண்டு இருக்கும் யானையுடன் போட்டோ ஷுட் நடத்தி அதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். எப்போதும் போல இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த "காலா" திரைப்படத்திலும் தல அஜித் நடித்த "விஸ்வாசம்" திரைப்படத்திலும் கூடவே "ராஜா ராணி" போன்ற ஒருசில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றியவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இதனால் இன்ஸ்டாவில் இவருடைய ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் விதவிதமான போட்டோ ஷுட் நடத்தி அதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டி யானையோடு போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார். படுத்துக் கொண்டு இருக்கும் அந்த யானை சாக்ஷி அருகில் சென்றவுடன் திமிறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது "அரண்மனை 3" படத்திலும் "புரவி" மற்றும் நடிகை ராய் லட்சுமியுடன் இணைந்து "சிண்ட்ரெல்லா" எனும் திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். இந்தப் படங்கள் தற்போது ரிலீசுக்கு காத்து இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.