close
Choose your channels

தாமரையுடன் நேருக்கு நேர் மல்லுகட்டும் இமான் அண்ணாச்சி: என்ன ஆச்சு மாநாடு டாஸ்க்?

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அரசியல் மாநாடு டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து உருண்டு தங்கள் கட்சி கொடியை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சற்று முன் வெளியாகிய அடுத்த புரமோ வீடியோவில் வெற்றிக் கொடிகட்டு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கார்டன் ஏரியாவில் கொடிகள் நடுவதற்கு இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கும் என்றும், அந்த தளத்தில் எந்த இரண்டு நபர்கள் தங்களுடைய கட்சி கொடியை நடுகிறார்களோ அந்த இரண்டு நபர்களின் கட்சிகளுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என்றும், இறுதியில் அதிக மதிப்பெண் எடுக்கும் கட்சி இந்த டாஸ்க்கில் வெற்றி பெரும் கட்சியாக அறிவிக்கப்படும் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

இந்த நிலையில் ஒரு சுற்றில் தாமரை, பாவனி மற்றும் இமான் அண்ணாச்சி ஆகிய மூவரும் கட்சி கொடியை நடுவதற்கு தயாராக இருக்கும் நிலையில் பாவனி தன்னுடைய கட்சி கொடியை நட்டு விடுகிறார். ஆனால் தாமரை மற்றும் இமான் அண்ணாச்சி ஆகிய இருவரும் கட்சி கொடியை நடுவதற்கு மல்லுகட்டும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் இந்த அரசியல் மாநாடு டாஸ்க் போட்டியாளர்கள் மத்தியில் மீண்டும் ஒரு சண்டையை ஏற்படுத்துமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz