close
Choose your channels
siren
lal_salaam

'தளபதி 68' அப்டேட்டை  'கான்ஜூரிங் கண்ணப்பன்' புரமோவில் வெளியிட்ட சதீஷ்.. வைரல் வீடியோ

Friday, November 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சதீஷ் நடித்த ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’என்ற படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ‘தளபதி 68’ அப்டேட்டும் உள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜாவிடம் காதல் தோல்வி அடைந்த ஒருவர் பாட்டு கேட்க வருகிறார். இதனை அடுத்து அம்மா மீது பாசம் இல்லை என ஒருவர் வைத்தியம் பார்க்க வருகிறார். அவர்களுக்கு சில பாடல்களை பரிந்துரை செய்த மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக சதீஷ் வரும் போது அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.

தனக்கு தூக்கம் வராமல் இருக்க ஒரு பாடல் வேண்டும் என்றும் தூக்கம் வந்தால் கனவில் நடப்பதெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது என்று கூறுகிறார். இதனை அடுத்து அவருக்கும் ஒரு பாட்டு கொடுக்கிறார்

இதனை அடுத்து அவர் எழுந்து செல்லும் போது ’அர்ச்சனா கல்பாத்தி மேடம் தான் கால் செய்தார்கள், ‘தளபதி 68’ படத்தின் பாடலையும் கேட்டு வரச் சொன்னார்கள் என்று கேட்க, அதற்கு யுவன் சங்கர் ராஜா ’வெளியில வெங்கட் பிரபு வெயிட் பண்ணுகிறார், அவரிடம் நான் சொல்லி தருகிறேன்’ என்று கூற சதீஷ் வெளியே போகும் காட்சியுடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அந்த வீடியோவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.