close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' செகண்ட்லுக்: மீண்டும் ஒரு விருந்து?

Monday, June 21, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்தின் டைட்டில் ‘பீஸ்ட்’ என்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ‘பீஸ்ட்’ என்று டைட்டிலும் கைகளில் துப்பாக்கியுடன் ஸ்டைலாக நிற்கும் விஜய்யின் போஸ்டரும் சமூக வலைதளங்களில் ஸ்தம்பித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்திய அளவில் ‘பீஸ்ட்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது என்பதும் இந்த படத்தின் டைட்டிலுக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் 2வது லுக் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த கொண்டதை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். இன்று இரவு மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று இரவு 12 மணிக்கு ‘பீஸ்ட்’ செகண்ட்லுக் வெளியாகுமா? அப்படி வெளியானால் அந்த லுக் எப்படி இருக்கும்? என்பதை இன்னும் மூன்று மணி நேரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz