close
Choose your channels

சென்னையில் மீண்டும் 'பீஸ்ட்' படப்பிடிப்பு: பூஜா ஹெக்டே கலந்து கொள்வாரா?

Tuesday, September 28, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்த நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கி அதன் பிறகு சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதன் பின்னர் ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சென்னை மற்றும் டெல்லியில் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் நடைபெற்று நடைபெற்றது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் இன்று முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படப்பிடிப்பில் இன்று விஜய் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை முதல் பூஜா ஹெக்டேவும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இந்த படப்பிடிப்புடன் பூஜாவின் காட்சிகள் நிறைவு பெற்றுவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அடுத்தஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz