close
Choose your channels
NMM
NMM

'தளபதி 66' படத்தின் நாயகி அறிவிப்பு: பிறந்த நாளில் கிடைத்த ஜாக்பாட்!

Tuesday, April 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகயிருக்கும் இந்த படம் தமிழ் தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் பான் - இந்தியா படமாக உருவாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா, தமன்னா, சமந்தா, திஷா பதானி உள்பட ஒரு சில நடிகைகளின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ’தளபதி 66’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரியதாக ஜாக்பாட் என கருதப்படுகின்றது.

தளபதி விஜய்யின் மாஸ்டர், பீஸ்ட் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ராஷ்மிகா மந்தனா பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் அந்த வாய்ப்புகள் நழுவியது என்பதும் தற்போது அவருக்கு விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.