close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

சூர்யாவை அடுத்து கேமியொ ரோலில் விஜய்? எந்த படத்தில் தெரியும?

Thursday, June 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்தார் என்பதும், ஐந்து நிமிடமே அவரது காட்சிகள் இருந்தாலும் அந்த காட்சிகள் மிகப்பெரிய அளவில் மாஸ் ஆக இருந்தது என்பதும் தெரிந்ததே.

சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை அனைத்து ஊடகங்களும் பாராட்டு தெரிவித்தன. ஒரு கேமியோ ரோலில் நடித்து இந்த அளவிற்கு பாராட்டைப் பெற முடியுமா என்று அனைவரையும் சூர்யா ஆச்சரியப்படுத்தியதை அடுத்து மேலும் சில பிரபல நடிகர்களும் கேமியோ ரோலில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சூர்யாவை அடுத்து தளபதி விஜய் பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் கேமியோ நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படம்தான் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘ஜவான்’. ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்க வாய்ப்பு நடிக்கவிருப்பதாகவும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் தீபிகா படுகோனும் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.