close
Choose your channels
Por
Joshwa

2 கதை சொன்னேன், ரெண்டும் விஜய்க்கு பிடிக்கல, ஆனால்.. பிரபல இயக்குனரின் ஆச்சரிய தகவல்..!

Friday, November 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2 கதை சொன்னேன், ரெண்டும் விஜய்க்கு பிடிக்கல, ஆனால்.. பிரபல இயக்குனரின் ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய்க்கு இரண்டு கதைகள் கூறினேன், ஆனால் இரண்டும் பிடிக்கவில்லை, ஆனால் அதே நேரத்தில் தற்போது இன்னொரு கதை அவரிடம் சொல்லி இருக்கிறேன், அந்த கதை அவருக்கு பிடித்திருக்கிறது, அதனால் விரைவில் எங்கள் கூட்டணியை எதிர்பார்க்கலாம் என பிரபல இயக்குனர் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவான ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 68’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விஜய் படத்தை இயக்குவது குறித்து ஒரு ஆச்சரிய தகவலை தெரிவித்துள்ளார், அதில் நான் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய்க்கு இரண்டு கதைகள் கூறினேன். ஆனால் இந்த இரண்டும் அவருக்கு பிடிக்கவில்லை. ஆனால் தற்போது ஒரு கதை அவருக்கு சொன்னேன், அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் விரைவில் எங்கள் இருவரது கூட்டணியில் ஒரு படத்தை எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து ’தளபதி 69’ திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.