close
Choose your channels
DJ
DJ

'தளபதி 67' பூஜை இந்த தினத்திலா? 'விக்ரம்' பாணியில் டீசரும் வெளியிட திட்டம்!

Thursday, December 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக உலகம் முழுவதம் ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘தளபதி 67’ திரைப்படம் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் டிசம்பர் 5-ஆம் தேதி ’தளபதி 67’ படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் பூஜைக்கு பின் இரண்டு நாட்கள் கழித்து இந்த படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படமும் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே டீசர் வெளியானது என்பது தெரிந்ததே. அதே பாணியில் ’தளபதி 67’ படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் இந்திய திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளதால் இந்த திரைப்படம் வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.