close
Choose your channels
Raayan

செம ஸ்பீடில் லோகேஷ் கனகராஜ்.. 'தளபதி 67' படத்தின் மாஸ் தகவல்!

Friday, January 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் ஒரு பக்கம் நேற்று முன்தினம் வெளியாகி வசூலை வாரி குவித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்துக் கொண்டிருக்கும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு சைலன்டாக மற்றும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சரியாக திட்டமிட்டு படத்தை மிகவும் ஸ்பீடாக இயக்கி வருவதாகவும் இதே ஸ்பீடில் படப்பிடிப்பு சென்றால் வரும் தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தின் அடுத்த படப்பிடிப்பு ஜனவரி 3ஆம் வாரத்தில் காஷ்மீரில் தொடங்க இருப்பதாகவும் இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பத்து நாட்களில் வெளியிடுவேன் என லோகேஷ் கனகராஜ் கூறி இருந்த நிலையில் அந்த அறிவிப்பை விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன் உள்பட பல நடித்து வருகின்றனர் என்பதும் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos