close
Choose your channels
siren
lal_salaam

'தளபதி 67' படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் இரட்டை குழந்தைகளில் ஒருவரா??

Thursday, February 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிக்கும் ’தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகளை அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் நேற்றும், முன்தினமும் போதும்போது என்ற அளவுக்கு அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்தன என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று வெளியான ’தளபதி 67’ பூஜை குறித்த வீடியோவில் குழந்தை நட்சத்திரம் ஒன்று இருந்ததை அனைவரும் பார்த்திருப்போம். அந்த குழந்தை நட்சத்திரம் யார் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளன.

தளபதி விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் நடிக்கும் குழந்தை நட்சத்திரத்தின் பெயர் இயல். இவர் நடிகர் அர்ஜுனனின் இரட்டை குழந்தைகளில் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் அர்ஜுனனுக்கு இளன், இயல் என இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில் இளன் ஏற்கனவே நயன்தாராவின் ’ஓ2’, கவினின் ’டாடா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இயல் ’தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே அருண் விஜய் நடித்த ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய், ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.