ஒரு மணி நேரத்திற்கு ஒரு அப்டேட்.. 'தளபதி 67' அப்டேட்டால் ரசிகர்கள் குஷி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதை எடுத்து படக்குழுவினர் இன்று தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு அப்டேட் என்ற வகையில் முதலில் இந்த படத்தில் சஞ்சய் தத் இணைந்துள்ளதாகவும் அதன் பின்னர் இந்த படத்தில் பிரியா ஆனந்த் இணைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சஞ்சய் தத் இணைந்துள்ளது குறித்து அவர் கூறிய போது, ‘நான் இந்த படத்தின் கதையையும் என்னுடைய கேரக்டரையும் கேட்டு அசந்து விட்டேன், இந்த படத்தில் நான் பணியாற்றுவதை மிகவும் பெருமையுடன் கருதுகிறேன், இந்த படத்தில் என்னுடைய பயணம் மிகவும் த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிரியா ஆனந்த் இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறிய போது, ‘தளபதி 67 படத்தில் இணைந்தது குறித்து எனக்கு திரில் அனுபவமாக உள்ளது. இந்த படத்தின் குழுவினர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து இன்னும் சில மணி நேரங்களில் இந்த படத்தில் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இணைய இருப்பது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
We feel esteemed to welcome @duttsanjay sir to Tamil Cinema and we are happy to announce that he is a part of #Thalapathy67 ❤️#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/EcCtLMBgJj
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023
Guess paniteenga nu theriyum, but first time kekra mari nenachikonga nanba 😉@PriyaAnand is officially part of #Thalapathy67 now 🔥#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/5cdFu5MtjN
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments