close
Choose your channels
Viruman
Laal

நீண்ட இடைவெளிக்கு பின் பாதை மாறும் விஜய்: ரசிகர்களுக்கு ஏமாற்றமா? கொண்டாட்டமா?

Wednesday, April 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதை மாற இருப்பதாகவும் அதனால் ஆக்சன் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் புதிய அவதாரத்தில் விஜய்யை காண இருப்பதால் கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 1ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தளபதி விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இல்லாத படமாக ’தளபதி 66’ இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல் இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக இன்னும் யாரும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 90களில் முழுக்க முழுக்க ரொமான்ஸ் படங்களில் நடித்து வந்த விஜய், ’திருமலை’ என்ற படத்திற்கு பின்னர்தான் ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். அதுமுதல் ’பீஸ்ட்’ வரை தொடர்ச்சியாக அவர் ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் ரொமான்ஸ் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதைக்கு மாறுகிறார். இந்த மாற்றம் அவரது திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.