close
Choose your channels
NMM

'தளபதி 66' நாயகி பட்டியலில் இணைந்த 'தோனி' பட நாயகி!

Wednesday, March 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2வது வாரம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

முதல்கட்டமாக இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று கூறப்பட்டது. அதன்பின் தமன்னா, சமந்தா, கீர்த்தி சனோன் உள்பட ஒரு சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி இந்த படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தோனி’ திரைப்படத்தில் அவரது காதலி பிரியங்கா என்ற கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இருப்பினும் இந்த படத்தின் நாயகி யார் என்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை பொறுமை காப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.